Thursday, February 28, 2019
Wednesday, February 27, 2019
Sunday, February 24, 2019
GROUP2 SHORT VIEW FOR BEGINNERS
EXAM PATTERN
Prilims Exam – 300 marks
Mains
Exam – 300 marks
Interview
– 40 marks
Prilims Exam
200 Question – 300marks
Exam
duration – 3hours
Prilims Question analysis:
General study – 55marks
Current affairs -20marks
Maths-25marks
Language(Tamil & English) – 100
GENERAL STUDY ANALYSIS:
History – 12questions
Political-12questions
Economics-6questions
Geography-8questions
Physics-5questions
Chemistry-5questions
Biology-7questions
GROUP2 MAINS EXAM:
Qualification (degree standard/ Descriptive type)
General Studies – 300marks/ 3hours
INTERVIEW -40 Marks
POST NAME:
Deputy Commerical tax officers
Sub Register, Grade –II
Probation Officer, Prison Department
Assistant Inspector of labour
Junior Employment officer
Assistant Section Officer
Executive officer Grade-II
Revenue Assistant
Handlomm inspector in handloom and textiles department
Junior Supervisor intendent in Tamilnadu Agricultural
Senior inspector of co-operative societies in department of
register of co-operative societies
Assistant inspector in local fund audit department
Audit inspector in the audit wing of HR & Administration
department
GROUP 1 SHORT VIEW FOR BEGINNERS
- General studies 150 marks
- Aptitude & Mental Ablity test 50 marks
- Total - 200 iteams = 300 marks
Exam Duration 3 hours
- Age limit 18 to 30
- Interviews & Records - 80 marks
- Exams,
Prilims exam
Mains exam
Interview
- Post Name
- Deputy collector
- Deputy Superintendent of Police
- Deputy Registarar
- Assistant Director
- District Registarar
- District Employment Officer
Saturday, February 23, 2019
Thursday, February 21, 2019
குரூப் - 2 தேர்வில் அதிரடி மாற்றம்
குரூப் -2 தேர்வுக்கான கேள்வி, விடைத்தாள் ஆகியவை ஒருங்கிணைந்த ஒரே விடை புத்தகமாக வழங்கப்படும். இது நாள் வரையில் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு கேள்வி, விடைத்தாள் தனித்தனியாக வழங்கப்பட்டு வந்தது.
தேர்வு முடிந்த ஓரிரு நாட்களில் தேர்வின், விடை புத்தகத்தின் மாதிரி நகல் இணையத்தில் வெளியிடப்படும்.
பிப்ரவரி 23 -ல் நடக்கும் குரூப் - 2 முதன்மை எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது .
tnpscexams.net என்ற இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Wednesday, February 20, 2019
Railway Recruitment Board - Vacancies: 85,000
Last Date ( to apply) :
31.03.2019
இத்தேர்வை தமிழில் எழுதலாம். நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வு மட்டுமே. ரயில்வே தேர்வினை பெண்களும் எழுதலாம். கல்லூரியில் படித்து கொண்டிருப்பவர்களும் இத்தேர்வினை எழுத முடியும்.
காலியிடங்கள் : 85,000
தகுதி : 10th std / ITI / 12th std / diploma / engineering
மேலும் விபரங்களுக்கு ,
Saturday, February 16, 2019
Friday, February 15, 2019
Thursday, February 14, 2019
TNPSC தேர்வு எழுதும் முன்பு கவனிக்க வேண்டியவை ….
TNPSC தேர்வு மட்டும் அல்ல, எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் சரி குறிப்பெடுத்து படிப்பது மட்டுமே வெற்றிக்கு வழி வகுக்கும்.தேர்வுகள் குறித்த மன ஓட்டங்களை குறைத்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு கடைசி நிமிடம் வரை படித்து கொண்டு இருக்கும் பழக்கத்தை விட வேண்டும். தேர்வுக்கு முந்தையநாள் இரவில் அதிக நேரம் கண் விழிக்க கூடாது.சிறிது நேரம் நமக்கு பிடித்த ஒன்றில் கவனம் செலுத்தலாம்.
சிறிய சிறிய உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்வது மூலம் உடலைப் புத்துணர்வாக வைத்து கொள்ள முடியும். நேர மேலாண்மை வெற்றிக்கு உதவும்.உடல் நலத்துடன் இருக்க உணவு,தூக்கம் என இரண்டிலும் கவனம் செலுத்துவது அவசியம். 6 முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் என்பது அவசியம்,சோர்வு, தூக்க உணர்வு, கோபம், உடம்பு வலி, ஜீரணமின்மை போன்றவை தூக்கமின்மையால் ஏற்படுப்பதாகும்.
திட்டமிட்டு படிப்பது என்பது அவசியம். கடைசி நேரத்தில் விழுந்து விழுந்து படிப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.படித்து முடித்த படங்களை திரும்ப, திரும்ப படிப்பது அவசியம்.திருப்புதல் தான் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும். திட்டமிடல், திறன்களை வளர்த்து கொள்ளுதல், மன அழுத்தம் கொள்ளாது இருத்தலே தேர்வில் வெற்றிக்கு இன்றியமையாதது.முயற்சி தான் வெற்றியின் அடிக்கல் என நினைவில் கொள்ளுங்கள் ….
Wednesday, February 13, 2019
புதியதாக tnpsc தேர்வு எழுதுபவர்களா நீங்கள்??? முதல்ல இதை கவனியுங்க ….
முதலில் எப்படி படிக்க தொடங்க வேண்டும் என்கிற கேள்வி tnpsc படிக்கும் அனைவரின் மனதிலும் ஆழ்ந்து கிடக்கும். சிலர் tnpsc சென்டர்களில் கிடைக்கும் குறிப்பேடுகளை வாங்கி படிப்பர். tnpsc தேர்வுகளைப் பொருத்தவகையில் 6 முதல் 12 வரையிலான பாடங்களுக்கு நீங்களே குறிப்பு எடுத்து படிப்பது, இத்தேர்வில் சில உள்ளார்ந்த கேள்விகளுக்கு விடையளிக்க உதவும்.
முதலில் எழுதப்போகும் தேர்வின் தன்மையை அறிய வேண்டும். ஒரு தேர்வினை எப்படி கையாள வேண்டும் என்பதை எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.அடுத்ததாக எழுதப்போகும் தேர்வின் பாடத்திட்டம் முழுமையாக தெரிந்திருக்க வேண்டியது இன்றியமையாதது. முந்தைய வினாத்தாள்களின் பயிற்சி முக்கியம். அப்போது தான் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு வினாக்கள் கேட்கப்படுகிறது என்பது பற்றிய தெளிவு கிடைக்கும்.
முதலில் எழுதப்போகும் தேர்வின் தன்மையை அறிய வேண்டும். ஒரு தேர்வினை எப்படி கையாள வேண்டும் என்பதை எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.அடுத்ததாக எழுதப்போகும் தேர்வின் பாடத்திட்டம் முழுமையாக தெரிந்திருக்க வேண்டியது இன்றியமையாதது. முந்தைய வினாத்தாள்களின் பயிற்சி முக்கியம். அப்போது தான் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு வினாக்கள் கேட்கப்படுகிறது என்பது பற்றிய தெளிவு கிடைக்கும்.
தேர்வுக்கு தயாராகும் முன்பு, தேர்வு குறித்த எதிர்மறையான எண்ணங்களையும், பயங்களையும் உதறி தள்ள வேண்டும். tnpsc வெளியிடும் ஆண்டுத்திட்டங்களை நினைவில் வைத்து கொண்டு தேர்வுக்கு தாயாராக வேண்டும். தினமும் படிக்க வேண்டிய பாடப்பகுதிகளை வரையறை செய்து கொள்ள வேண்டும். பாடங்களை அட்டவணைகளாகப் பிரித்து கொண்டு படிப்பது இத்தேர்வின் வெற்றிக்கு வழி வகுக்கும்.தொடர்ப்பயிற்சி வெற்றிக்கு உதவும்.வாழ்த்துக்கள் …..
Tuesday, February 12, 2019
குரூப்-2a தேர்வில் வெற்றி பெறுவதற்கான சில டிப்ஸ்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் குரூப்-2a தேர்வானது மிகவும் எளிமையானது. இத்தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என்னும் இருநிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே முதன்மைத் தேர்வினை எழுத முடியும்.முதல்நிலைத் தேர்வில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பகுதி பொதுத்தமிழ் ஆகும்.
இத்தேர்வில் இயற்பியல் பகுதியில் 3% வினாக்களும், வேதியியலில் 6% வினாக்களும், தாவரவியல் & விளங்கியலில் 5% வினாக்களும் கேட்கப்படுகின்றன. நடப்பு நிகழ்வு பகுதியிலும் கணிதப் பகுதியிலும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். ஏனென்றால் இந்த பகுதியிலும் கிட்டத்தட்ட 47% வினாக்கள் வருகின்றன. அடுத்த முக்கியமான பகுதி அரசியல் அறிவியல். இதில் 13% சதவீத வினாக்கள் பங்கு வகிக்கின்றன.
புவியியல் பகுதியில் 7% வினாக்களும், வரலாறு பகுதியில் 7% வினாக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்திய தேசிய இயக்கம் என்கிற பகுதியில் 4% வினாக்களும், பொருளாதாரப் பகுதியில் 8% வினாக்களும் இடம் பெறுவதைக் காணலாம்.முதல்நிலைத் தேர்வை பொருத்தவகையில் தமிழ், கணிதம், நடப்பு நிகழ்விகள், வரலாறு, அரசியல் அறிவியல் முதலிய பகுதிகளைப் படித்தாலே 160+ வினாக்களுக்கு மேல் விடையளிக்க முடியும்.
இதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வுக்கு தயார் செய்யும்போது மாநில \ தேசிய அளவிலான நடப்பு நிகழ்வுகள், அறிவியல் மற்றும் விஞ்ஞானம் தொடர்பான வினாக்களில் கவனம் செலுத்தினால் முதன்மைத் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். தொடர்ப் பயிற்சி இருந்தாலே வெற்றி பெறலாம்.
Sunday, February 10, 2019
Saturday, February 9, 2019
Friday, February 8, 2019
டி.என்.பி.சி தேர்வர்களின் பதற்றங்களும் அதற்கான தீர்வுகளும்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தேர்வினை எழுதும் தேர்வர்களின் மனநிலை பயத்திற்குள்ளும், போட்டியாளர்களைக் குறித்த சந்தேகத்திற்குள்ளும், தேர்வு நிலை குறித்த வதந்திக்குள்ளும் ஆட்பட்டு இருக்கும். தேர்வர்களின் மனநிலை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் நிலையில் வெற்றிக்கனியை எளிதில் சுவைக்கலாம்.
அரசு தேர்வுகைளை எழுதும் தேர்வர், அதனோடு தொடர்புடைய ஏனைய தேர்வுகளையும் எழுதுவது அவசியம். அப்போது தான் எடுத்துகொண்ட துறைப் பற்றிய ஆழமான அறிவைப் பெற முடியும். உதாரணமாக குரூப் 1,2 போன்ற தேர்வுகளுக்கு தயார் செய்யும் தேர்வர்களுக்கு குரூப் 4 தேர்வு மிகவும் எளிமையானது.ஏனென்றால் பெருவாரியான பாடப்பிரிவுகள் ஒத்துக் காணப்படும். எனவே ஒரு போட்டித் தேர்வோடு தொடர்புடைய ஏனைய தேர்வுகளை எழுதுவது அவசியம்.
போட்டித் தேர்வர்களுக்குத் தன்னம்பிக்கை என்கிற ஆயுதம் இருந்தால் மட்டுமே போட்டித் தேர்வை எதிர்கொள்ள முடியும். மகிழ்ச்சியான சூழல், தேர்வுக்குரிய பயம் தவிர்த்து தயார் செய்யும் தேர்வோடு தொடர்ப்புடைய பிற தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்.தன்னம்பிக்கையும், தொடர் முயற்சி அரசு தேர்வுக்களில் வெற்றி அடைய வழி வகுக்கும்.
Subscribe to:
Posts (Atom)
-
Last Date ( to apply) : 31.03.2019 இத்தேர்வை தமிழில் எழுதலாம் . நேர்முகத் தேர்வு கிடையாது . எழுத்துத் தேர்வு மட்டுமே . ரயில்வே...

























