TNPSC தேர்வு மட்டும் அல்ல, எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் சரி குறிப்பெடுத்து படிப்பது மட்டுமே வெற்றிக்கு வழி வகுக்கும்.தேர்வுகள் குறித்த மன ஓட்டங்களை குறைத்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு கடைசி நிமிடம் வரை படித்து கொண்டு இருக்கும் பழக்கத்தை விட வேண்டும். தேர்வுக்கு முந்தையநாள் இரவில் அதிக நேரம் கண் விழிக்க கூடாது.சிறிது நேரம் நமக்கு பிடித்த ஒன்றில் கவனம் செலுத்தலாம்.
சிறிய சிறிய உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்வது மூலம் உடலைப் புத்துணர்வாக வைத்து கொள்ள முடியும். நேர மேலாண்மை வெற்றிக்கு உதவும்.உடல் நலத்துடன் இருக்க உணவு,தூக்கம் என இரண்டிலும் கவனம் செலுத்துவது அவசியம். 6 முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் என்பது அவசியம்,சோர்வு, தூக்க உணர்வு, கோபம், உடம்பு வலி, ஜீரணமின்மை போன்றவை தூக்கமின்மையால் ஏற்படுப்பதாகும்.
திட்டமிட்டு படிப்பது என்பது அவசியம். கடைசி நேரத்தில் விழுந்து விழுந்து படிப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.படித்து முடித்த படங்களை திரும்ப, திரும்ப படிப்பது அவசியம்.திருப்புதல் தான் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும். திட்டமிடல், திறன்களை வளர்த்து கொள்ளுதல், மன அழுத்தம் கொள்ளாது இருத்தலே தேர்வில் வெற்றிக்கு இன்றியமையாதது.முயற்சி தான் வெற்றியின் அடிக்கல் என நினைவில் கொள்ளுங்கள் ….

Nice
ReplyDelete