முதலில் எப்படி படிக்க தொடங்க வேண்டும் என்கிற கேள்வி tnpsc படிக்கும் அனைவரின் மனதிலும் ஆழ்ந்து கிடக்கும். சிலர் tnpsc சென்டர்களில் கிடைக்கும் குறிப்பேடுகளை வாங்கி படிப்பர். tnpsc தேர்வுகளைப் பொருத்தவகையில் 6 முதல் 12 வரையிலான பாடங்களுக்கு நீங்களே குறிப்பு எடுத்து படிப்பது, இத்தேர்வில் சில உள்ளார்ந்த கேள்விகளுக்கு விடையளிக்க உதவும்.
முதலில் எழுதப்போகும் தேர்வின் தன்மையை அறிய வேண்டும். ஒரு தேர்வினை எப்படி கையாள வேண்டும் என்பதை எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.அடுத்ததாக எழுதப்போகும் தேர்வின் பாடத்திட்டம் முழுமையாக தெரிந்திருக்க வேண்டியது இன்றியமையாதது. முந்தைய வினாத்தாள்களின் பயிற்சி முக்கியம். அப்போது தான் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு வினாக்கள் கேட்கப்படுகிறது என்பது பற்றிய தெளிவு கிடைக்கும்.

தேர்வுக்கு தயாராகும் முன்பு, தேர்வு குறித்த எதிர்மறையான எண்ணங்களையும், பயங்களையும் உதறி தள்ள வேண்டும். tnpsc வெளியிடும் ஆண்டுத்திட்டங்களை நினைவில் வைத்து கொண்டு தேர்வுக்கு தாயாராக வேண்டும். தினமும் படிக்க வேண்டிய பாடப்பகுதிகளை வரையறை செய்து கொள்ள வேண்டும். பாடங்களை அட்டவணைகளாகப் பிரித்து கொண்டு படிப்பது இத்தேர்வின் வெற்றிக்கு வழி வகுக்கும்.தொடர்ப்பயிற்சி வெற்றிக்கு உதவும்.வாழ்த்துக்கள் …..
பதிவுக்கு நன்றி
ReplyDeleteLike ittt
ReplyDelete