தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தைப் பொருத்தவகையில் நடப்பு நிகழ்வு வினாக்களின் பங்களிப்பு அதிகம் .சுமாராக 25-க்கும் மேற்பட்ட வினாக்கள் கேட்கப்படுகிறது .நடப்பு நிகழ்வுகளை தயார் செய்யும் போது விளையாட்டுத்துறை தொடர்பான கேள்விகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் .எடுத்துக்காட்டாக ராஜீவ் காந்திகேல்ரத்னாவிருது,துரோணாச்சாரி விருது,அர்ஜுனா விருதுபெற்றோர் தொடர்பான கேள்விகள் இடம்பெறுகின்றன .ஐ.நா வின் விளம்பரத்தூதர்கள் ,துறைமுகங்கள் ,பறவை சரணாலயங்கள் ,பன்னாட்டு விமானநிலையங்கள் தொடர்பான வினாக்கள் அதிக அளவில் கேட்கப் படுகின்றன .பொருளாதாரம் தொடர்பான மாநாடுகள் ,இந்திய அளவிலான மாநாடுகள் பற்றிய கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படுகின்றன .இதனை டி .என் .பி .சி பழைய வினாத்தாள்களை கூ ர்ந்து கவனித்தாலே அறியலாம் .தமிழக அரசின் திட்டங்கள் ,மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் ,பல்வேறு மாநிலங்ககளில் அறிமுகம் செய்யப்படும் திட்டங்கள் இத்தேர்வில் முக்கியத்துவம் பெறுகின்றன .இந்திய \ உலக அளவிலான இலக்கிய விருது தொடர்பான வினாக்களை அறிந்து வைத்து இருப்பது கூ டுதல் பயனளிக்கும் .பருவநிலை ,பருவக் காற்றுகள் ,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சார்ந்த கேள்விகள் ,புயல்கள் தொடர்பான கேள்விகளின் பங்கு அதிகம் .
இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கை ,உலக அளவில் விருது பெரும் இந்தியர் தொடர்பான கேள்விகளைப் எப்பகுதியில் காணலாம் .ஆசிய \ உலகளவிலான முக்கிய போட்டிகளை பற்றி அறிய வேண்டியது அவசியம்.
நடப்பு நிகழ்வுகளை தயார் செய்வதில் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும் .உதாரணமாக, ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜெனீவாவில் நடைப்பெற்றது .என எடுத்துக்கொண்டால் ,போட்டி நடைப்பெற்ற இடம் ,எத்தனையாவது போட்டி ,2 & 3 -ம் இடம் பெற்றவர்கள் யார்?,என பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் தயார் செய்வது நடப்பு நிகழ்வு பகுதியில் எளிமையாக வெற்றி பெற வழி வகுக்கும் .தினசரி செய்தித்தாள்களின் வாசிப்பு இருந்தாலே இப்பகுதியில் வெற்றி பெறலாம் .
No comments:
Post a Comment