தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் குரூப் - 4 தேர்வுவானது பத்தாம் வகுப்பு தகுதி பெற்றோருக்கு உரியது .அரசு தேர்வுகளில் மிகவும் எளிமையானது.இந்த தேர்வுகளை பொறுத்தவகையில் சமச்சீர் 6 முதல்12 வரையில் ஆன பாட புத்தகத்தில்லிருந்தே பொதுதமிழ் வினாக்களில் 94% கேள்விகள் இடம் பெறுகின்றன .
தமிழை அடுத்து கவனம் செலுத்தவேண்டிய முக்கிய பகுதி கணிதம் ஆகும் .கணிதத்தை பொறுத்தவகையில் 25 மதிப்பெண்களுக்கு கேட்கப்படுகிறது .குரூப் 4 தேர்வில் கணிதத்தில் ஒருசில பகுதிகளை உற்று நோக்கினாலே 16%வினாக்களுக்கு விடையளிக்க முடியும். உதாரணமாக சுருக்குக ,தனிவட்டி,கூட்டுவட்டி, வயதுகணக்குகள், சதவீதக்கணக்குகள் ,
மீ .சீ .ம \ மீ .பொ .வ முதலிய பகுதிகளில் கவனம் செலுத்துவது முக்கியம் .
வ்ரலாறு பாடப்பிரிவில் கிட்டத்தட்ட 16 வினாக்கள் கேட்கப்படுகின்றன .அதில் முக்கியமானவை குஷானப் பேரரசு ,டெல்லி சுல்தான்கள் ,விஜயநகரப் பேரரசு ,பாமினி அரசுகள் ,மொகலாயர்கள் வருகை தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி ,தமிழகத்தில் பண்பாட்டு மரபுகள் ,வரலாற்றில் பெண்களை முன்னிறுத்தும் கேள்விகள்,ஐ .நா தொடர்பான கேள்விகள் ,இந்திய விடுதலை இயக்கம் ,சமுதாய மாற்றங்கள் முதலியவற்றில் கவனம் செலுத்தினாலே 8 கேள்விகளுக்கு மேல் விடையளிக்க முடியும் .
தமிழ் ,கணிதம் ,வரலாறு முதலிய பகுதிகளில் மட்டும் கூர்ந்து படித்தாலே 140 வினாக்களுக்கு விடையளிக்க முடியும் .
அரசியல் அறிவியல் பகுதியில் இருந்து 8 வினாக்கள் கேட்கப்படுகிறது .இந்திய அரசியல் அமைப்பு தொடர்பான வினாக்கள் பங்களிப்பு அதிகம் .பொருளாதாரத்தில் இருந்து 7வினாக்களுக்கு மேலாக கேட்கப்படுகிறது ,அறிவியல் பகுதியில் 15 வினாக்கள் கேட்கப் படுகிறது .நடப்பு நிகழ்வு வினாக்களில் கவனம் செலுத்துவது முக்கியம் .தினசரி செய்தித்தாள்களை படித்தாலே போதுமானது.
பழைய வினத்தாள்களின் பயிற்சி அவசியம்.தொடர்ப் பயிற்சியும் முயற்சியும் இருந்தாலே குரூப் 4 தேர்வில் வெற்றி பெறலாம் .
Good information
ReplyDeleteஅருமையான பதிவு சகோ.... தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteNice information
ReplyDelete