Thursday, February 7, 2019

குரூப் - 2 தேர்வில் வெற்றி பெற சில டிப்ஸ் …!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் குரூப் -2 தேர்வானது மிகவும் எளிமையானது. இத்தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்கிற மூன்று படிநிலைகளைக் கொண்டதாகும்.முதல்நிலைத் தேர்வும், முதன்மைத் தேர்வும் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. நேர்முகத் தேர்வானது 40 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றது. 200 கேள்விகள் கொண்டு 300 மதிப்பெண்களுக்கு இத்தேர்வானது நடத்தப்படுகிறது.ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண்களைக் கொண்டது.

            முதல்நிலைத்தேர்வில் பொதுத்தமிழில் 100 கேள்விகளும், பொதுஅறிவு பகுதியில் 55 கேள்விகளும், கணிதப் பகுதியில் 25 கேள்விகளும், நடப்புநிகழ்வு பகுதியில் 20 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. குரூப் -2வைப் பொறுத்தவகையில் நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியப் பகுதி தமிழ். அதைத் தொடர்ந்து கணிதம் 25% வினாக்களும், வரலாறு 12% வினாக்களும் கேட்கப்படுகிறது. அறிவியல் பகுதியில் 17% வினாக்களும், புவியியல் பகுதியில் 8% வினாக்களும் கேட்கப்படுகின்றன.

            இதனைத் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது முதன்மைத் தேர்வாகும். இத்தேர்வில் விரிவான வகையில் விடையளிக்கும் பொருட்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. இத்தேர்வில் பொது அறிவுப் பகுதியிலும்தேசிய \ மாநில அளவிலான நடப்பு நிகழ்வுகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

            நேர்முகத் தேர்வில் மாவட்டத்தின் சிறப்பு, மண்ணின் சிறப்பு, சமூக நிலை, பொருளாதார சிறப்பு, தேர்வான நபர் பற்றிய தன் விபர குறிப்புகள் போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. குரூப் -2 தேர்வைப் பொருத்த வகையில் தொடர்ப் பயிற்சி வெற்றிக்கு வழி வகுக்கும்.


3 comments:

ANNA UNIVERSITY LATEST -2019