Tuesday, February 12, 2019

குரூப்-2a தேர்வில் வெற்றி பெறுவதற்கான சில டிப்ஸ்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் குரூப்-2a தேர்வானது மிகவும் எளிமையானது. இத்தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என்னும் இருநிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே முதன்மைத் தேர்வினை எழுத முடியும்.முதல்நிலைத் தேர்வில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பகுதி பொதுத்தமிழ் ஆகும்.

            இத்தேர்வில் இயற்பியல் பகுதியில் 3% வினாக்களும், வேதியியலில் 6% வினாக்களும், தாவரவியல் & விளங்கியலில் 5% வினாக்களும் கேட்கப்படுகின்றன. நடப்பு நிகழ்வு பகுதியிலும் கணிதப் பகுதியிலும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். ஏனென்றால் இந்த பகுதியிலும் கிட்டத்தட்ட 47% வினாக்கள் வருகின்றன. அடுத்த முக்கியமான பகுதி அரசியல் அறிவியல். இதில் 13% சதவீத வினாக்கள் பங்கு வகிக்கின்றன.

புவியியல் பகுதியில் 7% வினாக்களும், வரலாறு பகுதியில் 7% வினாக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்திய தேசிய இயக்கம் என்கிற பகுதியில் 4% வினாக்களும், பொருளாதாரப் பகுதியில் 8% வினாக்களும் இடம் பெறுவதைக் காணலாம்.முதல்நிலைத் தேர்வை பொருத்தவகையில்  தமிழ், கணிதம், நடப்பு நிகழ்விகள், வரலாறு, அரசியல் அறிவியல் முதலிய பகுதிகளைப் படித்தாலே  160+ வினாக்களுக்கு மேல் விடையளிக்க முடியும்.

இதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வுக்கு தயார் செய்யும்போது மாநில \ தேசிய அளவிலான நடப்பு நிகழ்வுகள், அறிவியல் மற்றும் விஞ்ஞானம் தொடர்பான வினாக்களில் கவனம் செலுத்தினால் முதன்மைத் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். தொடர்ப் பயிற்சி இருந்தாலே வெற்றி பெறலாம்.


1 comment:

ANNA UNIVERSITY LATEST -2019