Monday, February 4, 2019

டி.என்.பி.சி குரூப் -4 தேர்வில் பொதுத்தமிழில் 100\100 பெற வேண்டுமா முதலில் இதை செய்யுங்க …

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்  நடத்தப்பெறும் தேர்வுகளில் முதன்மையான இடத்தைப் பெறுவது பொதுத்தமிழ் ஆகும். பொதுத்தமிழில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படுகின்றன. தமிழைத் தேர்வுக்காக தயார் செய்யும்போது செய்யுள், உரைநடை, இலக்கணம் , இலக்கியம், துணைப்பாடம் தொடர்பான வினாக்கள், முதலியப்  பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். செய்யுள்  தொடர்பான  வினாக்கள் 40% இடம்பெறுகின்றது. பொதுத்தமிழை தயார் செய்யும் போது செய்யுள் பகுதிக்கு முக்கியத்துவம் அளிப்பது இன்றியமையாதது . எடுத்துக்காட்டாக சுரதா ,மீரா ,பெருஞ்சித்திரனார் ,பாரதியார், பாரதிதாசன்,குமரகுபரர்  உள்ளிட்ட அறிஞர்கள் பற்றிய வினாக்களை தொடர்ச்சியாக கேட்கப்படுவதை காணலாம். உரைநடைப் பகுதியில் 30% கேள்விகள் பங்கு வகிக்கின்றனஇதில்  திராவிட மொழிகள் , ஆனந்தரங்கர் பற்றிய கேள்விகள், காமராசர் , நேரு எழுதிய கடிதம், காந்தியடிகள் பற்றிய செய்திகள் முதலியவை பெருவாரியாக கேட்கப் படுகின்றன

துணைப்பாடம் தொடர்பான வினாக்கள் 10% கேட்கப்படுகின்றன. மொழித்திறன் பயிற்சி  வினாக்களும் 10% முக்கியத்துவம் பெறுவதைக்  காணலாம் . தமிழ் வினாக்களை பொருத்தமட்டில் 6 முதல் 10  வரையிலான சமச்சீர் பாடப் புத்தகங்களைப் படித்தாலே 80% கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்.

கூடுதல் மதிப்பெண் பெற 12 வரையிலான சமச்சீர் பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும். தேவிரா ஒரு மதிப்பெண் அடிப்படையிலான இலக்கிய வரலாறு புத்தக வாசிப்பு கூடுதல் மதிப்பெண்பெற்று இப்பகுதியில் வெற்றி பெற உதவும். தமிழ் வினாப் பகுதியில்வெற்றி பெறுவது கட் ஆப் ரீதியில் முதலிடம் வகிக்க உதவும். தொடர்ப் பயிற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும்.


1 comment:

ANNA UNIVERSITY LATEST -2019