தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் குரூப்-4 தேர்வில் அறிவியல் பகுதிகளிலிருந்து 15 மதிப்பெண்களுக்கு கேள்விகள் பங்கு பெறுகின்றன. விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பகுதியில் வினாக்கள் கேட்கப்படுகின்றன.விலங்கியல் பகுதியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால் இப்பகுதியில் 6% வினாக்கள் வருகின்றன. எடுத்துக்காட்டாக மனித உடலமைப்பு, உறுப்பு மண்டலம், நோய்த்தடை காப்பியல், உணவு முறை, வைட்டமின் தொடர்பான கேள்விகள் அதிக அளவில் இடம் பெறுகின்றன.
விலங்கியலை அடுத்து அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதி தாவரவியல் ஆகும். இதில் 4% வினாக்கள் கேட்கப்படுகின்றன. வகைப்பாட்டியல்,செல் அமைப்பு தொடர்பான கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.அடுத்த முக்கியமான பகுதி வேதியியல் ஆகும். இதில் 2% கேள்விகள் பங்கு பெறுகின்றன. உதாரணமாக கரைசல்கள் மற்றும் பருப்பொருள்கள் சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படுகின்றன.
இறுதியாக இயற்பியல் பகுதியில் 2% வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதில் அளவீட்டியல், இயக்கவியல்,மின்னியல் & வெப்பவியல், அணு அமைப்பு தொடர்பான கேள்விகளும் குறியீட்டு வாய்ப்பாடுகளும் கேட்கப்படுகின்றன.தொடர்ப்பயிற்சி இருந்தால் இப்பகுதியில் எளிதில் வெற்றி பெறலாம்.


very nice, Thank you so much
ReplyDelete