Wednesday, February 6, 2019

டி.என்.பி.சி தேர்வுகளில் கட்ஆப் ரீதியில் முதலிடம் வகிக்க என்ன வழி?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணைத்தால் நடத்தப்பெறும் தேர்வுகளில் முதன்மை இடத்தைப் பெற முந்தையப் பதிவுகளில்  பார்த்ததைப் போல தமிழ், கணிதம், வரலாறு பகுதிகளைத் தொடர்ந்து  பொது அறிவு எனப்படும்  பாடப்பிரிவுகளில் கவனம் செலுத்துவது முக்கியம். பொருளாதாரத்தைப் பொருத்தவகையில் 8% வினாக்கள்கேட்கப் படுவதால் சமூக பொருளாதாரப் பிரச்சனைகள், மக்கள்தொகை, ஐந்தாண்டு திட்டங்கள், 20- அம்ச திட்டங்கள், வறுமை மற்றும் வேளாண்மை தொடர்பான பகுதிகளில் அதிகப்படியான வினாக்கள் கேட்கப்படுகின்றன.

பொருளாதாரத்தைத் தொடர்ந்து முக்கிய இடம் வகிப்பது புவியியல் ஆகும். அதில் சூரிய குடும்பம், அண்டம், காலநிலை இந்தியா பற்றிய வள ஆதாரங்கள் தொடர்பான கேள்விகள், அதிக அளவில் பங்கு வகிக்கின்றன. அடுத்ததாக மிக முக்கியமான பகுதி அரசியல் அறிவியல். இதில் மத்திய, மாநில அரசுகள், நமது நாடு அதன் சிறப்பு கூறுகள் சார்ந்த கேள்விகள் கேட்கப்படுகின்றன.சட்டம், சமத்துவம், நீதிமன்றம் தொடர்பான கேள்விகளில் கவனம்செலுத்த வேண்டும்.


 இத்தேர்வைப் பொருத்தவகையில் சிறுசிறு பகுதிகளில் கூட கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக முக்கியமான தினங்கள், தமிழ்நாட்டைப் பற்றிய முதன்மை தகவல்கள், மத்திய அரசு திட்டங்கள், உயிரி உரம் தொடர்பான வினாக்கள், பொருளாதார மாநாடுகள்  முதலிய பகுதிகளில்கவனம் செலுத்துவது உங்களை கட்ஆப் ரீதியில் முதலிடம்வகிக்க உதவும். கவனிக்காமல் விட்டு செல்லும் பகுதிகளில் கவனம்செலுத்துவது முக்கியம்.சிறுதுளி பெருவெள்ளம் என்பதை  கருத்தில்  கொண்டு  தினமும் முயற்சியுங்கள். வெற்றி பெ வாழ்த்துக்கள்...

2 comments:

ANNA UNIVERSITY LATEST -2019